சோழனார் (சோழங்கனார்) PART-2
சோழங்கன் ஏரி
முதலாம்
ராஜேந்திர சோழர், தன்னுடைய வட
நாட்டு வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட
சோழ புரத்தில் ஒரு கோயிலும், ஒரு
பெரிய ஏரியையும் அமைத்தார். அந்த ஏரியின் பெயர் சோழங்கன்
ஏரி. தற்போது அது பொன்னேரி
என்று அழைக்கப் படுகின்றது.
சோழங்கப் பெருமான்
கம்பர்
காலத்தில் நிகழ்ந்ததாக சொல்லப் படும் ஒரு
சுவையான நிகழ்ச்சி. சோழர்கள் புலவர்களைப் பெருமளவில் ஆதரித்து வந்தனர். நல்ல கவிதைகளை இயற்றுவோருக்கு
பெருமளவுப் பொன்னும் பொருளும் அளித்தனர். விறகு வெட்டி ஒருவனின் மனைவிக்கு,
இது சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழியாகத் தெரிந்தது. தனது கணவனையும் ஏதேனும் கவிதை
எழுதி அரசனிடம் பரிசு வாங்கி வரச் சொன்னாள். அவளுடைய கணவனோ மூடன். தனக்கு ஏதும் கவிதை
எழுதத் தெரியாது என சொல்ல, எதையாவதுப் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்து, கன்னா பின்னா
என்று எழுதி விட்டு போ என்றாள். அந்த மூடனும், தான் செல்லும் வழியில் கண்டதையும் கேட்டதையும்
வைத்து ஒரு கவிதை எழுதினான். அரசவைக்கு சென்று, தான் மன்னரைப் புகழ்ந்து ஒரு பாடல்
எழுதியுள்ளதாகக் கூறினான். மன்னரும் அனுமதி அளிக்க, அவன் எழுதிய பாடலைப் பாடினான்.
“மண்ணுண்ணி
மாப்பிள்ளையே
காவிறையே,
கூவிறையே
உங்களப்பன்
கோவில் பெருச்சாளி,
கன்னா
பின்னா மன்னா தென்னா
சோழங்கப்
பெருமானே!”
எனப்
பாடலை முடித்ததும், அவையோர் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். கம்பர் அவனுடைய
ஏழ்மையையும், முட்டாள் தனத்தையும் கண்டு அவனைக் காப்பாற்ற எண்ணினார். அவையினரைப் பார்த்து,
இது உண்மையிலேயே பொருள் பொதிந்த கவிதை என்று
அதன் பொருளை விளக்கினார்.
மண்ணுண்ணி
என்பது திருமாலைக் குறிக்கும். மா என்பது திருமகளைக்
குறிக்கும். இவர்களின் பிள்ளை மன்மதன். நம்
அரசரை இந்தப் புலவர், மன்மதனே
என்கிறார். கா என்றால் வானுலகம்.
காவிறையே என்றால் வானுலகை ஆளும்
இந்திரனே என்று பொருள். கூ
என்றால் மண்ணுலகம். கூவிறையே என்றால் மண்ணுலகை ஆள்பவனே
என்று பொருள். விண்ணும் மண்ணும்
நம் அரசரின் ஆட்சியில் என்கிறார்
புலவர். உங்களப்பன் கோ-வில்லில் பெரிசு-ஆளி என்று பிரிக்க
வேண்டும். நம் மன்னனின் தந்தையார்
வில்லில் ஆளிபோல் வல்லவர். தந்தையின்
தனித்தன்மையை சொல்வதன் மூலம் மகன் அவரினும்
வலியவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார்
புலவர். கன்னா-கர்ணனே,பின்னா-தருமனே, மன்னா-மன்னவனே,
தென்னா-தென்னவனே, சோழங்கப் பெருமானே - சோழ
மன்னனே என்று பொருள் சொன்னாராம்
கம்பர்.
சோழ
அரசன் சோழங்கன் என அழைக்கப் பட்டிருப்பதற்கு
எதுத்துக் காட்டாக இதைப் பார்க்கலாம்.
மண உறவு
விஜயாலய
சோழன் முதல் ராஜராஜ சோழன் வரை மணம் முடித்த குலங்கள்.
வ
எண்
|
சோழமன்னனின்
பெயர்
|
மனைவியின் குலம்
|
1
|
விஜயாலயச் சோழன்
|
மழவராயர்
|
2
|
ஆதித்த சோழன்
|
வல்லவராயர்
|
3
|
முதலாம் பராந்தக சோழன்
|
பழுவேட்டரையர்
|
4
|
கண்டராதித்த சோழன்
|
மழவராயர்
|
5
|
அரிஞ்சய சோழன்
|
வைதும்பராயர் & கொடும்பாளூரார்
|
6
|
சுந்தரசோழன்
|
சேதிராயர்
|
7
|
உத்தமசோழன்
|
மழவராயர் & இருங்கோ
வேளிர்
|
8
|
முதலாம் இராசராசசோழன்
|
கொடும்பாளூரார் & பழுவேட்டரையர்
|
விஜயாலய
சோழன் முதல் ராஜராஜ சோழன் வரையிலான பிற்கால சோழர்கள், மழவராயர், பழுவேட்டரையர், சேதிராயர்,
வல்லவராயர், வைதும்பராயர், கொடும்பாளூரார்,
இருங்கோ வேளிர் போன்றொருடன்
மண உறவு கொண்டுள்ளனர்.
இப்போது
ஒரு குறிப்பிட்ட ஊரில்
உள்ள சோழங்கானர் குடும்பத்தினர், கடந்த
நான்கு தலைமுறையாக (இந்தத் தலைமுறையைத் தவிர்த்து), பெண் கொடுத்து பெண் எடுத்துள்ள
குலங்களைப் பார்ப்போம்:
மழவராயர்,
பழுவேட்டரையர், சேதிராயர், நரசிங்கராயர், பல்லவராயர், தொண்டைமானார், காலிங்காராயர்,
ஜெயப்ப்புலியார், கொண்டியார், வெள்ளிப்பிரியர்.

No comments:
Post a Comment