Wednesday, October 15, 2014

சோழர்களின் மரபணு PART-2

இந்திய இனக் குழுக்கள்

உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், அவனுடைய சந்ததியினரே வெவ்வேறு கால கட்டங்களில் உலகம் முழுதும் பரவினர் என்பது ஒரு சாரார் கருத்து. ஆப்பிரிக்காவில் காணப்படும் தொன்மையான மரபணுக்கள் இதற்கு ஆதாரமாக சுட்டிக் காட்டப் படுகின்றன. இதனை அடிப்படையாக வைத்தே நேஷனல் ஜியாகிராபிக் சானல் போன்றவை மரபணு ஆராய்ச்சியை நடத்துகின்றன.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்றும், குமரிக் கண்டமே மனிதர்கள் முதலில் தோன்றிய இடமென்றும் ஒரு கருத்து உண்டு. எது எப்படி இருப்பினும், நம்முடைய மரபணு ஆராய்ச்சிக்கு இரு வேறு விதமான இந்தக் கருத்துக்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.  

இப்போதைக்கு முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்ற கருத்தையே எடுத்துக் கொள்வோம்.

Y-DNA பிரிவு (Haplogroup) C

முதல் மனிதனின் Y-DNA பிரிவு A என்று பார்த்தோம். சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து இதிலிருந்து Y-DNA பிரிவு B பிரிந்தது.  சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு Y-DNA பிரிவு C பிரிந்தது.

ஆசியாவில் தோன்றிய இவர்கள் (Y-DNA பிரிவு C), கால் நடையாகவே கிழக்கு நோக்கி கடற்கரையை ஒட்டி பயணம் செய்தனர். செல்லும் வழியில் ஆங்காங்கே சிலர் தங்கி விட்டனர். இவர்களின் சந்ததியினர் தமிழகம், கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களில் இன்னும் உள்ளனர்.  இவர்கள் தங்கள் பயணத்தை கடைசியாக முடித்த இடம் ஆஸ்திரேலியா. அபாரிஜின் என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களே இவர்கள். 

இந்தியாவில் முதன் முதலாகக் குடியேறிய இனமாக இவர்கள் கருதப் பட்டாலும், இந்தியாவில் இவர்கள் நாகரிகம் எதையும் தோற்றுவிக்கவில்லை.
வன்னியர், நாடார், பிரன் மலைக் கள்ளர், பறையர் உள்ளிட்ட தமிழ்க் குடிகளிடம் இந்த மரபணுடையோர் சுமார் 10 சதவீதம் வரை உள்ளனர்.

Y-DNA பிரிவு (Haplogroup) H

சுமார் 25,000 முதல் 45,000 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய இந்தியாவில் (இன்றைய தெற்காசியாவில்) தோன்றிய இவர்கள் தான் இந்தியாவின் முதல் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள். இவர்களே சிந்து வெளி நாகரிகத்தின் சொந்தக் காரர்கள். இவர்களே  திராவிடர்கள் (தமிழர்) என அழைக்கப் படுகின்றனர். இந்த மரபணுடையோர் இந்தியாவில் சுமார் 27 சதவீதம் வரை உள்ளனர்.

இந்தியாவின் பெரும்பான்மையான சூரிய, சந்திர மற்றும் அக்னி குல அரசர்கள் இந்த மரபணு உடையவர்களாகவே இருக்க வேண்டும். இதைப் பற்றி விரிவான மரபணு ஆய்வு மேற்கொண்டால் உண்மை தெரியும். 

Monday, July 28, 2014

சோழர்களின் மரபணு PART-1

மரபணு

போர்க் களத்தில் தோல்வியே காணாத ஒன்பது இந்திய அரசர்களில் மூவர் சோழ மன்னர்கள்(1)கரிகால சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய மூன்று மாமன்னர்களே அவர்கள். இந்த சோழர்களின் மரபணு இன்றும் தொடர்கின்றதா? இந்த மரபணு உடையோர் யார்? போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன், மரபணு என்பது என்ன? அதன் மூலம் ஒரு இனம் அல்லது குலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்பது பற்றி பார்ப்போம். 

மனிதர்களின் உடல் கோடிக் கணக்கான உயிரணுக்களால் (cells) ஆனது. இந்த உயிரணுவின் கருவில் மரபு குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு உயிரணுவிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில் 22 ஜோடி குரோமோசோம்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி இருக்கும். 23-வது ஜோடி குரோமோசோம் ஆணுக்கு XY என்றும் பெண்ணுக்கு XX என்றும் இருக்கும்.

Y-DNA

ஆணுக்குரிய XY குரோமோசோமில் X என்பது தாயிடமிருந்தும் Y என்பது தந்தையிடமிருந்தும் பெறப்படும். பெண்ணுக்குரிய XX குரோமோசோமில் ஒரு X தாயிடமிருந்தும் ஒரு X தந்தையிடமிருந்தும் பெறப்படும். 

மகன் தந்தையிடமிருந்து பெறக்கூடிய Y குரோமோசோம் என்பது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாறாமல்  ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலை முறைக்கு செல்லக்கூடியதுஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும்போது அந்த தலை முறையிலிருந்து அது வேறு இனமாக மாறி விடும்.

Y-DNA பிரிவுகள் (HAPLOGROUPS) (2)

உலகின் முதல் மனிதன் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.  இவருடைய Y-DNA பிரிவு (Haplogroup) A ஆகும்.

சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மரபணு எவ்வித பெரிய மாற்றமும் இல்லாமல் தந்தையிடமிருந்து மகனுக்கு, மகனிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு என்று தொடர்ச்சியாக வந்துள்ளது. சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து இதிலிருந்து Y-DNA பிரிவு B பிரிந்துள்ளது. இதே போன்று வெவ்வேறு காலகட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து புதிய Y-DNA பிரிவுகள் (இனக் குழுக்கள்) தோன்றியுள்ளன.


கீழேயுள்ள அட்டவனையில் வெவ்வேறு இனக்குழுக்கள் தோன்றியிருக்கக்கூடிய காலம் மற்றும் இடத்தைப் பார்க்கலாம்.


Y-DNA Haplogroupதோன்றிய காலம் (ஆண்டுகளுக்கு முன்பு)தோன்றியிருக்கக்கூடிய இடம்
A (முதல் மனிதன்)147,000 - 237,000மத்திய-வட மேற்கு ஆப்ரிக்கா
B60,000 - 65,000தெரியவில்லை
C (அபாரிஜின்)50,000ஆசியா
D50,000ஆசியா
E50,000கிழக்கு ஆப்ரிக்கா (அ) ஆசியா
F48,000தெற்காசியா/தென் மேற்காசியா (அ) மத்திய கிழக்கு
G14,000 - 30,000காகசஸ்
H (தமிழர்/திராவிடர்)25,000 - 45,000தெற்காசியா
I25,000 - 30,000ஐரோப்பா
J31,700 (+/-) 12,800அரேபியா தீபகற்பம்
K35,000 - 45,000தென்கிழக்கு ஆசியா
L25,000 - 30,000தெற்காசியா (அ) மத்திய ஆசியா
N20,000 - 25,000தெற்கு சீனா
O28,000 - 41,000தென்கிழக்கு (அ) கிழக்கு ஆசியா
Q17,000 - 22,000மத்திய ஆசியா
R (ஆரியர்/பிராமணர்/ சிங்களவர்)26,800மத்திய ஆசியா
(தொடரும்)

References

1. http://en.wikipedia.org/wiki/Narasimhavarman_I 
2. http://en.wikipedia.org/wiki/Human_Y-chromosome_DNA_haplogroup 


Thursday, December 26, 2013

சோழனார் (சோழங்கனார்) PART-2


சோழங்கன் ஏரி

முதலாம் ராஜேந்திர சோழர், தன்னுடைய வட நாட்டு வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழ புரத்தில் ஒரு கோயிலும், ஒரு பெரிய ஏரியையும் அமைத்தார். அந்த ஏரியின் பெயர் சோழங்கன் ஏரி. தற்போது அது பொன்னேரி என்று அழைக்கப் படுகின்றது.

சோழங்கப் பெருமான்

கம்பர் காலத்தில் நிகழ்ந்ததாக சொல்லப் படும் ஒரு சுவையான நிகழ்ச்சி. சோழர்கள் புலவர்களைப் பெருமளவில் ஆதரித்து வந்தனர். நல்ல கவிதைகளை இயற்றுவோருக்கு பெருமளவுப் பொன்னும் பொருளும் அளித்தனர். விறகு வெட்டி ஒருவனின் மனைவிக்கு, இது சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழியாகத் தெரிந்தது. தனது கணவனையும் ஏதேனும் கவிதை எழுதி அரசனிடம் பரிசு வாங்கி வரச் சொன்னாள். அவளுடைய கணவனோ மூடன். தனக்கு ஏதும் கவிதை எழுதத் தெரியாது என சொல்ல, எதையாவதுப் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்து, கன்னா பின்னா என்று எழுதி விட்டு போ என்றாள். அந்த மூடனும், தான் செல்லும் வழியில் கண்டதையும் கேட்டதையும் வைத்து ஒரு கவிதை எழுதினான். அரசவைக்கு சென்று, தான் மன்னரைப் புகழ்ந்து ஒரு பாடல் எழுதியுள்ளதாகக் கூறினான். மன்னரும் அனுமதி அளிக்க, அவன் எழுதிய பாடலைப் பாடினான்.

மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறையே, கூவிறையே
உங்களப்பன் கோவில் பெருச்சாளி,
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்கப் பெருமானே!”

எனப் பாடலை முடித்ததும், அவையோர் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். கம்பர் அவனுடைய ஏழ்மையையும், முட்டாள் தனத்தையும் கண்டு அவனைக் காப்பாற்ற எண்ணினார். அவையினரைப் பார்த்து, இது உண்மையிலேயே பொருள் பொதிந்த கவிதை  என்று அதன் பொருளை விளக்கினார்.

மண்ணுண்ணி என்பது திருமாலைக் குறிக்கும். மா என்பது திருமகளைக் குறிக்கும். இவர்களின் பிள்ளை மன்மதன். நம் அரசரை இந்தப் புலவர், மன்மதனே என்கிறார். கா என்றால் வானுலகம். காவிறையே என்றால் வானுலகை ஆளும் இந்திரனே என்று பொருள். கூ என்றால் மண்ணுலகம். கூவிறையே என்றால் மண்ணுலகை ஆள்பவனே என்று பொருள். விண்ணும் மண்ணும் நம் அரசரின் ஆட்சியில் என்கிறார் புலவர். உங்களப்பன் கோ-வில்லில் பெரிசு-ஆளி என்று பிரிக்க வேண்டும். நம் மன்னனின் தந்தையார் வில்லில் ஆளிபோல் வல்லவர். தந்தையின் தனித்தன்மையை சொல்வதன் மூலம் மகன் அவரினும் வலியவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் புலவர். கன்னா-கர்ணனே,பின்னா-தருமனே, மன்னா-மன்னவனே, தென்னா-தென்னவனே, சோழங்கப் பெருமானே - சோழ மன்னனே என்று பொருள் சொன்னாராம் கம்பர்.

சோழ அரசன் சோழங்கன் என அழைக்கப் பட்டிருப்பதற்கு எதுத்துக் காட்டாக இதைப் பார்க்கலாம்.

மண உறவு

விஜயாலய சோழன் முதல் ராஜராஜ சோழன் வரை மணம் முடித்த குலங்கள்.

வ எண்
சோழமன்னனின் பெயர்
மனைவியின் குலம்

1
விஜயாலயச் சோழன்
மழவராயர்
2
ஆதித்த சோழன்
வல்லவராயர்
3
முதலாம் பராந்தக சோழன்
பழுவேட்டரையர்
4
கண்டராதித்த சோழன்
மழவராயர்
5
அரிஞ்சய சோழன்
வைதும்பராயர் & கொடும்பாளூரார்
6
சுந்தரசோழன்
சேதிராயர்
7
உத்தமசோழன்
மழவராயர் & இருங்கோ வேளிர்
8
முதலாம் இராசராசசோழன்
கொடும்பாளூரார் & பழுவேட்டரையர்

விஜயாலய சோழன் முதல் ராஜராஜ சோழன் வரையிலான பிற்கால சோழர்கள், மழவராயர், பழுவேட்டரையர், சேதிராயர், வல்லவராயர், வைதும்பராயர், கொடும்பாளூரார், இருங்கோ வேளிர் போன்றொருடன் மண உறவு கொண்டுள்ளனர்.

இப்போது ஒரு குறிப்பிட்ட  ஊரில் உள்ள சோழங்கானர் குடும்பத்தினர், கடந்த நான்கு தலைமுறையாக (இந்தத் தலைமுறையைத் தவிர்த்து), பெண் கொடுத்து பெண் எடுத்துள்ள குலங்களைப் பார்ப்போம்:
மழவராயர், பழுவேட்டரையர், சேதிராயர், நரசிங்கராயர், பல்லவராயர், தொண்டைமானார், காலிங்காராயர், ஜெயப்ப்புலியார், கொண்டியார், வெள்ளிப்பிரியர்.


Tuesday, June 5, 2012

ஆதித்ய சோழன் பள்ளிப்படை


ஆதித்ய சோழன் பள்ளிப்படை

 
கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி அதன் 
அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில் 
இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர்
கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப் 
பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.

தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள் 
பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு
முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த 
சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன் 
என்பவனை சண்டையில் வீழ்த்தி தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை, 
செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் "தொண்டை நாடு 
பாவிய சோழன்" என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி 
முடிந்துவிட்டது. 

 ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு 
வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ 
சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த 
சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் 
காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு 
எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் 
இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் 
உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் 
தொண்டைமானாற்றூரில் இறந்து போனான். 

அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் 
சாமாதிக் கோயிலை "பள்ளிப்படை" என்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை 
ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின்
அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய 
சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த 
சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் 
உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம். 

ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் 
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு 
இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் 
அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு 
செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் 
பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 
கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் 
வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை 
கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு 
கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த 
அடியார்களாக இருக்கவேண்டும். "பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்" என்று 
கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் 
இருக்கவேண்டும். "தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் 
இருநூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ
சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு 
என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், 
வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று 
கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று 
அறிகிறோம்.

இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக 
ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், 
கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் 
அளந்தனர். 

இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும்
இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம்
இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல்
கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் 
கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் 
கொடுக்கப்பட்டது. 

இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும்
காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று 
இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக்
கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். 


சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு 
திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய 
பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?

இப்போழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே 
தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். 
பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து 
போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் 
கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. 
விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக 
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் 
தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் 
என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு 
ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு 
படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்.


நன்றி : திரு. வசந்தராஜா படையாட்சியார் 
http://vanniyarkula-kshathriyar.blogspot.com/2012/05/blog-post_10.html