சோழர்களின் மரபணு PART-2
இந்திய இனக் குழுக்கள்
இந்திய இனக் குழுக்கள்
உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், அவனுடைய சந்ததியினரே வெவ்வேறு கால கட்டங்களில் உலகம் முழுதும் பரவினர் என்பது ஒரு சாரார் கருத்து. ஆப்பிரிக்காவில் காணப்படும் தொன்மையான மரபணுக்கள் இதற்கு ஆதாரமாக சுட்டிக் காட்டப் படுகின்றன. இதனை அடிப்படையாக வைத்தே நேஷனல் ஜியாகிராபிக் சானல் போன்றவை மரபணு ஆராய்ச்சியை நடத்துகின்றன.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்றும், குமரிக் கண்டமே மனிதர்கள் முதலில் தோன்றிய இடமென்றும் ஒரு கருத்து உண்டு. எது எப்படி இருப்பினும், நம்முடைய மரபணு ஆராய்ச்சிக்கு இரு வேறு விதமான இந்தக் கருத்துக்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
இப்போதைக்கு முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்ற கருத்தையே எடுத்துக் கொள்வோம்.
Y-DNA பிரிவு (Haplogroup) C
முதல் மனிதனின் Y-DNA பிரிவு A என்று பார்த்தோம். சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து இதிலிருந்து Y-DNA பிரிவு B பிரிந்தது. சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு Y-DNA பிரிவு C பிரிந்தது.
ஆசியாவில் தோன்றிய இவர்கள் (Y-DNA பிரிவு C), கால் நடையாகவே கிழக்கு நோக்கி கடற்கரையை ஒட்டி பயணம் செய்தனர். செல்லும் வழியில் ஆங்காங்கே சிலர் தங்கி விட்டனர். இவர்களின் சந்ததியினர் தமிழகம், கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களில் இன்னும் உள்ளனர். இவர்கள் தங்கள் பயணத்தை கடைசியாக முடித்த இடம் ஆஸ்திரேலியா. அபாரிஜின் என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களே இவர்கள்.
இந்தியாவில் முதன் முதலாகக் குடியேறிய இனமாக இவர்கள் கருதப் பட்டாலும், இந்தியாவில் இவர்கள் நாகரிகம் எதையும் தோற்றுவிக்கவில்லை.
வன்னியர், நாடார், பிரன் மலைக் கள்ளர், பறையர் உள்ளிட்ட தமிழ்க் குடிகளிடம் இந்த மரபணுடையோர் சுமார் 10 சதவீதம் வரை உள்ளனர்.
Y-DNA பிரிவு (Haplogroup) H
சுமார் 25,000 முதல் 45,000 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய இந்தியாவில் (இன்றைய தெற்காசியாவில்) தோன்றிய இவர்கள் தான் இந்தியாவின் முதல் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள். இவர்களே சிந்து வெளி நாகரிகத்தின் சொந்தக் காரர்கள். இவர்களே திராவிடர்கள் (தமிழர்) என அழைக்கப் படுகின்றனர். இந்த மரபணுடையோர் இந்தியாவில் சுமார் 27 சதவீதம் வரை உள்ளனர்.
இந்தியாவின் பெரும்பான்மையான சூரிய, சந்திர மற்றும் அக்னி குல அரசர்கள் இந்த மரபணு உடையவர்களாகவே இருக்க வேண்டும். இதைப் பற்றி விரிவான மரபணு ஆய்வு மேற்கொண்டால் உண்மை தெரியும்.

No comments:
Post a Comment